பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்

ஸ்ரீமத் பகவத் கீதை

மகாபாரத குருஷேத்ர போரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய உபதேசம்

அத்தியாயம் 1

அர்ஜுன விஷாத யோகம்

ஸ்லோகம் 1.1

த்ருத்ராஷ்ர உவாச

"தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரேசமவேதா யுயுத்ஸவ:மாமகா: பாண்டவஸ் சைவகிமகுர்வத சஞ்ஜய"

தர்ம க்ஷேத்ரத்தில் குருக்ஷேத்ரத்தில்
போர் புரியும் விருப்பத்துடன்
ஒன்று கூடிய என்னுடையவர்களும்
மேலும் பாண்டுவின் மகன்களும்
என்ன செய்தனர் சஜ்சயனே?

- ரங்கநாதன் இராமமூர்த்தி

அத்தியாயம் 1

அர்ஜுன விஷாத யோகம்

ஸ்லோகம் 1.2

சஞ்ஜயன் கூறுகிறார்

"த்ருஷ்டவா து பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ் ததா
ஆசார்யம் உபஸங்க ராஜா வசனம் அப்ரவீத்"

பாண்டவர்களின் போர் வீரர்கள்
வியூகமாய் அணிவகுக்கப்பட்டிருந்ததை பார்த்த
பின் அரசன் துரியோதனன்
அந்த நேரத்தில் ஆச்சாரியரை
அனுகி பேசுகிறார்

- ரங்கநாதன் இராமமூர்த்தி

OH HEY, FOR BEST VIEWING, YOU'LL NEED TO TURN YOUR PHONE